×

பங்குனி உத்திர திருவிழா இன்று நிறைவு; சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா கோலாகலம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவடைகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் உற்சவ பலி உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 9வது நாளான நேற்று இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெற்றது. கடைசி நாளான இன்று பம்பையில் ஆராட்டு நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை ஐயப்ப விக்கிரகம் யானை மீது வைக்கப்பட்டு, வாத்திய மேளங்களுடன் பம்பைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பிறகு பம்பை நதியை ஒட்டியுள்ள குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு ஆராட்டு நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் ஆராட்டு நடத்தினர். இதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஐயப்ப விக்கிரகம் பம்பை கணபதி கோயிலில் வைக்கப்பட்டது. மதியத்திற்கு பின்னர் ஐயப்ப விக்கிரகம் யானை மீது வைக்கப்பட்டு மீண்டும் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நிறைவடையும்.

The post பங்குனி உத்திர திருவிழா இன்று நிறைவு; சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Panguni Utra Festival ,Sabarimala Ayyappan Temple Aarad Festival Kolagalam ,Thiruvananthapuram ,Panguni Uthra festival ,Sabarimala Ayyappan temple ,Sabarimala ,Ayyappan Temple Aaratu Kogalalam ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...